Gautam Gambhir returns to Kolkata Knight Riders: அப்படிப்போடு... கொல்கத்தா அணியின் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.. மீண்டும் கவுதம் கம்பீர்.!
அவர் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 22, புதுடெல்லி (Sports News): மார்ச் மாதம் 23ம் தேதி முதல் மே மாதம் 29ம் தேதி வரையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கான ஏலம் டிசம்பர் மாதம் 19ம் தேதி நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடரை பொறுத்தமட்டில், இந்திய அளவில் பிசிசிஐ நிர்வாகத்தால் நடத்தப்படும் போட்டியாக இருக்கிறது. 10 அணிகள் தங்களுக்குள் 20 ஓவர்கள் முறையில் பலபரீட்சை நடத்தும். இறுதியாக ஐபிஎல் கோப்பை வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்படும்.
சிஎஸ்கே அணியில் வழக்கம்போல தல தோனி தலைமையிலான அணி போட்டியை எதிர்கொள்கிறது. சில மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை முன்னதாக கவுதம் கம்பிர் வழிநடத்தி வந்தார். Football Fans Fight: கால்பந்தாட்ட ரசிகர்களுக்குள் சண்டை: தடியடி நடத்தியதில் ஒருவரின் மண்டை உடைப்பு.. அதிர்ச்சியில் உறைந்த மெஸ்ஸி.!
அவர் கேப்டனாக இருக்கும்போது இரண்டு முறை ஐபிஎல் கோப்பையையும் அந்த அணி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு அவர் மாற்றப்பட்ட நிலையில், தற்போது அந்த அணியில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து, கவுதம் கம்பீர் மீண்டும் தனது கொல்கத்தா நைட் ரைடர் அணிக்கே திரும்பியுள்ளார். அவர் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கொல்கத்தா அணியின் உரிமையாளர்களாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான், நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் இருக்கின்றனர்.