RCB Stampede (Photo Credit: @kiranpatel1977 X)

ஜூன் 04, பெங்களூர் (Karnataka News): டாடா ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல்முறையாக தனது வெற்றி கோப்பையை கையில் ஏந்தியது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் தொடர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம், பெங்களூர் விமான நிலையத்திற்கு வருகை தந்த விராட் கோலி, ரஜத் படிதாரை அம்மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேரில் சென்று சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். RCB Victory Parade: பெங்களூரு வந்த கிங் கோலி.. ஓடோடி சென்று வரவேற்ற துணை முதல்வர்.. கப் அடித்த கொண்டாட்டத்தில் கர்நாடக மக்கள்.! 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகர்கள் பலி (RCB Fans Death Stampede):

இந்நிலையில், பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானம் பகுதியில் ரசிகர்கள் திரளாக கூடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும், 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

விதான் சௌதா முன் கூடிய ரசிகர்கள்:

ரசிகர்களின் இறுதி நிமிட காணொளி: