German Football Player Retirement: பிரபல கால்பந்து வீரர் ஓய்வு பெற போவதாக அறிவிப்பு..!
ஜெர்மனி கால்பந்து வீரரும், ரியல் மாட்ரிட் கிளப் அணி வீரருமான டோனி குரூஸ் கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
மே 22, பெர்லின் (Sports News): ஜெர்மனியை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் டோனி குரூஸ் 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பிற்குப் (Euro 2024) பிறகு கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவார் என்று ரியல் மாட்ரிட் அறிவித்துள்ளது. 34 வயதான இவர் "யூரோ 2024 அடுத்து தொடர்ந்து ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக தனது நேரத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளார்" என்று கூறியுள்ளது. Young Girl Suicide: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; காதலனை கரம் பிடிக்க முடியாத விரக்தியில் விபரீத முடிவு..!
இவர், சர்வதேச கால்பந்து போட்டியில் ஜெர்மன் அணிக்காக 108 ஆட்டங்களில் விளையாடி 17 கோல்கள் அடித்துள்ளார். மேலும், ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் (Real Madrid Club) அணிக்காக 2014-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். அந்த கிளப்பில் விளையாடி 22 பட்டங்கள் வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
சிறந்த நடுகள வீரர்களில் ஒருவராக ஜெர்மனியை சேர்ந்த டோனி குரூஸ் (Toni Kroos) திகழ்ந்தார். தற்போது, வருகின்ற ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடருடன் கால்பந்தில் இருந்து ஓய்வு பெற போவதாக தெரிவித்துள்ளார்.