Young Girl Suicide: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; காதலனை கரம் பிடிக்க முடியாத விரக்தியில் விபரீத முடிவு..!

கன்னியாகுமரியில் இளம்பெண் ஒருவர் தான் விரும்பிய காதலனை கரம் பிடிக்க முடியாததால், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Young Girl Suicide: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; காதலனை கரம் பிடிக்க முடியாத விரக்தியில் விபரீத முடிவு..!
Hanging Suicide File Pic (Photo Credit: Pixabay)

மே 22, கன்னியாகுமரி (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை அடுத்த, சரல் உன்னங்குளத்தை சேர்ந்த நாராயணன் என்பவருக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில், அவரது கடைசி மகள் பவானி (வயது 19) பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, அழகு கலை பயிற்சி முடித்துள்ளார். இவர், தனது உறவினரான வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு இவரது பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். TN Govt Action Against YouTuber Irfan: கருவில் வளரும் சிசுவின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான்; தமிழக அரசு கடும் நடவடிக்கை..!

இதனையடுத்து, பவானிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயமும் செய்துள்ளனர். இதன்காரணமாக, தனது காதலனை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் இருந்த பவானி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து, அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இச்சம்பவம் குறித்து, வெள்ளிச்சந்தை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பவானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலனை திருமணம் செய்துகொள்ள முடியாத காரணத்தினால், இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on May 22, 2024 11:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).