FIFA rankings: பீபா ரேங்கிங்கில் 2 புள்ளிகள் பின்தங்கிய பிரேசில்: அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் தொடர்ந்து முதலிடம்..!
ஆடவர் பீபா உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளுக்கான அறிவிப்புகளுடன், ரேங்கிங் தொடர்பான தகவலும் வெளியாகி கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
டிசம்பர் 01, ஜூரிச் (Switzerland): சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் கலந்துகொள்ளும் கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடர், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளால் தலைமையேற்று நடத்தப்படும். 2026 பிபா உலகக்கோப்பை (FIFA World Cup 2026) கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளன. அதனைத்தொடர்ந்து, 2030 கால்பந்தாட்ட உலகக்கோப்பை மொராக்கோ, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
சவுதியில் 2030 பீபா போட்டி: இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை 3 நாடுகளும் பகிர்ந்துகொண்டுள்ளன. உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பராகுவே நாட்டில், உலகக்கோப்பை 2030 போட்டியுடன் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2030 கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர், 2034ல் சவுதி அரேபியாவில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. Animal Part 2: ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம்.. இரண்டாம் பாகத்திற்கு அறிவிப்பை கொடுத்த படக்குழு: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
பீபா ரேங்கிங் வெளியீடு: இன்று பீபா அமைப்பு வெளியிட்டுள்ள பதிவுகளின்படி, அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணி தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. 1855.20 புள்ளிகளை அர்ஜென்டினா அணி பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் 1845.44 புள்ளிகளுடன் பிரான்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது.
உருகுவே முன்னேறி வருகிறது: மூன்றாவது இடத்தில் இருந்த பிரேசில் நாடுகளை கடந்து தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதனையடுத்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன. 15வது இடத்தில் இருந்த உருகுவே, 4 புள்ளிகள் முன்னேறி 11 வது இடத்தையும் பெற்றுள்ளது.