AUS Vs SA: சாம்பியன்ஸ் டிராபி 2025: ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் ஏழாவது ஆட்டம் தொடங்கி நடைபெறவுள்ளது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெற எம்மை பின்தொடரவும்.
பிப்ரவரி 24, ராவல்பிண்டி (Cricket News): 09வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், (பிப்.23) நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி அடைந்தது. இன்று (பிப்.24) நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. அதனைத்தொடர்ந்து, நாளை (பிப்.25) மதியம் 02:30 மணியளவில், பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி (Rawalpindi Cricket Stadium) கிரிக்கெட் மைதானத்தில், ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்க தேசிய கிரிக்கெட் அணி மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், குரூப் 'பி' பிரிவில் முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ள தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால், நாளைய ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. RCB Vs UPW: பெண்கள் பிரீமியர் லீக்: இன்று பெங்களூர் - உபி வாரியர்ஸ் சின்னசாமி மைதானத்தில் மோதல்.. விபரம் உள்ளே.!
தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் விபரம்:
தென்னாபிரிக்க அணியின் சார்பில் (South Africa Squad for Champions Trophy 2025 SA Vs AFG Match) டேவிட் மில்லர் (David Miller), ரஸி டுசென், தம்பா பவுமா (Temba Bavuma), டோனி டி ஜோர்சி, ஏய்டன் மார்க்கம் (Aiden Markram), கார்பின் போஸ்ச், மார்கோ ஜான்சன், வியன் முல்டர், ஹென்ரிச் கால்சன் (Heinrich Klaasen), ரியல் ரிகில்டன், திரிஷ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs), காகிஸோ ரபாடா (Kagiso Rabada), கேசவ் மகாராஜ் (Keshav Maharaj), லுங்கி நெகிடி (Lungi Ngidi), டப்ராய்ஸ் ஷம்சி ஆகியோர் விளையாடவுள்ளனர். இவர்களில் தம்பா பவுமா அணியை வழிநடத்துகிறார். NZ Vs BAN: நியூசிலாந்து - வங்கதேசம் சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று நியூசி., அணி பௌலிங் தேர்வு.!
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விபரம்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சார்பில் (Team Australia Squad for ICC Champions Trophy 2025) ஜேக் பிரஸர் மெக்குர்க் (Jake Fraser-McGurk), ஸ்டீவ் ஸ்மித் (), டார்விஸ் ஹெட் (Tarvis Head), மார்ன்ஸ் லபுஷக்னே (Marnus Labuschagne), ஆரோன் ஹார்டி (Aaron Hardie), கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell), மேத்திவ் ஷார்ட் (Matthew Short), அலெக்ஸ் காரே (Alex Carey), ஜோஷ் இங்கிலீஸ் (Jos Inglis), ஆடம் ஜாம்பா (Adam Zampa), பென் டவர்ஷுய்ஸ் (Ben Dawarshuis), நாதன் எல்லிஸ் (Nathan Ellis), சியான் அப்போட் (Sean Abbott), ஸ்பென்ஸர் ஜான்சன் (Spencer Johnson), தன்வீர் சங்கா (Tanveer Sangha) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)