
பிப்ரவரி 24, ராவல்பிண்டி (Sports News): பாகிஸ்தான் நாட்டில் 09 வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 29 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் தலைமையேற்று நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது. நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆட்டத்தில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுவரை சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், 5 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று (பிப். 24, 2025) 6வது போட்டியில் வங்கதேசம் - நியூசிலாந்து (BAN Vs NZ Champions Trophy 2025) அணிகள் மோதுகின்றன. ராவல்பிண்டி (Rawalpindi) மைதானத்தில், மதியம் 2.30 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெறுகிறது. IND Vs PAK Highlights: அசத்திய இந்தியா.. பாகிஸ்தானுக்கு எதிராக திரில் வெற்றி.. விராட் கோலி சதம் அடித்து அபாரம்.!
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததைத்தொடர்ந்து, வங்கதேசம் தேசிய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்து வருகிறது. மிட்செல் சான்டனர் தலைமையிலான (Team New Zealand Squad) நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் தேவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம், கிளன் பிலிப்ஸ், மிசேல் பிரேஸ்வெல், மாட் ஹென்றி, கைல் ஜெமிசன், வில் ஓ ரூர்கே களமிறங்குகின்றனர். நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணியில் தஞ்சித் ஹாசன், மெஹிடி ஹாசன், தவ்ஹீத் ஹ்ரிடோய், முஷபிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, ஜாகிர் அலி, ரஷீத் ஹொசைன், தஸ்கின் அஹ்மத், முஸ்தபிழுர் ரஹ்மான், நஹிட் ராணா ஆகியோர் களமிறங்குகின்றனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி முன்னதாக பாகிஸ்தான் அணியுடன் மோதி வெற்றி அடைந்த நிலையில், இன்று இரண்டாவது ஆட்டத்தை எதிர்கொள்கிறது. அதேநேரத்தில், வங்கதேசம் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் போராடி தோல்வி அடைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.