
பிப்ரவரி 24, பெங்களூர் (Sports News): இந்தியாவில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில், டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) போட்டி விறுவிறுப்புடன் நடைபெறுகிறது. இன்று ஒன்பதாவது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உபி வாரியர்ஸ் (RCB Vs UP Warriorz Women's Premier League 2025) பெண்கள் கிரிக்கெட் அணி மோதுகிறது. இந்த ஆட்டம் இன்று (24 பிப். 2025) இரவு, பெங்களூர் எம். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், 07:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி - உபி வாரியர்ஸ் (RCB Vs UPW T20 WPL 2025) பெண்கள் அணி மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும், ஒரேயொரு வெற்றியுடன் நான்காவது இடத்தில் இருக்கும் உபி வாரியஸ் அணியும் களம்காண்கிறது. இதனால் ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஆட்டத்தில், மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியும் தனது முதல் தோல்வியை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. NZ Vs BAN: நியூசிலாந்து - வங்கதேசம் சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று நியூசி., அணி பௌலிங் தேர்வு.!
அணி வீரர்களின் விபரம்:
உபி வாரியர்ஸ் (UP Warriorz Women's WPL Squad 2025) அணியில் தீப்தி ஷர்மா (Deepti Sharma), ஆருஷி ஜோயல், கிரண் நவ்கிரெ, ஸ்வேதா செஹ்ராவாத், விர்ந்தா தினேஷ், சமாரி அதப்பத்து, சினலே ஹென்றி, கிரேஸ் ஹாரிஸ், பூனம் கெம்னர், தஹியா மேக்ராத், உமா சேத்ரி, அஞ்சலி சர்வானி, கெளஹர் சுல்தானா, கிராந்தி காட், ராஜேஸ்வரி கெய்க்வாட், சல்மா தாகோர், சோபி எஸ்லேஸ்டோன், அலனா கிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கிரிக்கெட் அணியில் (Royal Challengers Bangalore Women's WPL Squad) ஸ்மித்ரி மந்தனா (Smriti Mandhana), தானி ஹோட்ஜ், சபினேனி மேக்னா, ஸ்மித்ரி மந்தனா, சார்லி டீன், எலிஸ் பேரி, ஜியார்ஜ் கிரகம், கனிகா அனுஜா, ராகவி பிஸ்ட், நுசத் பிரவீன், ரிச்சா கோஷ், ஜக்ரவி பவார், ஜோசிதா, ரேனுகா சிங், சினேக ராணா, ஆஷா சோபனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்று ரசிகர்களுக்கு பூமிகா திவேதியின் குரலில் பாடல் விருந்து:
Dynamic beats and electrifying vibes! ⚡
Get Ready for @BhoomiOfficial to light up the Mid-Innings Show! 🙌#TATAWPL | #DCvGG pic.twitter.com/mxbF2UWPsP
— Women's Premier League (WPL) (@wplt20) February 24, 2025