IND Vs BAN: இலக்கை நிர்ணயம் செய்தது வங்கதேச அணி; இந்தியாவின் பந்துவீச்சை சிதறவிட்ட வீரர்கள்.!
இன்று ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங்கை தேர்வு செய்து, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை குவித்துள்ளது.
அக்டோபர் 19, மும்பை (Sports News): ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 (ICC Cricket World Cup 2023) இந்தியாவில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. போட்டியை இந்தியா தனி நாடாக நடத்துவதால், இந்தியாவில் உள்ள வெவ்வேறு மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. அக்.19 ம் தேதியான இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா - வங்கதேச (IND Vs BAN) அணிகள் மோதிக்கொள்ளும் 17வது போட்டி நடைபெற்று வருகிறது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை குவித்துள்ளது. இதனால் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இதனால் இன்று இந்திய அணிக்கு வெற்றி கிடைக்குமா? என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
வங்கதேச அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் ஹசன் 43 பந்துகளில் 51 ரன்னும், தாஸ் 82 பந்துகளில் 66 ரன்னும், ரஹீம் 46 பந்துகளில் 38 ரன்னும், முக்மதுல்லா 46 பந்துகளில் 36 ரன்னும் அடித்து அணிக்கு வலுசேர்த்தனர். Heart Attack Kills: நடுரோட்டில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்; அதிரவைக்கும் காட்சிகள் உள்ளே.!
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியின் சார்பில் விளையாடிய பாண்டியா பந்து பட்டதில் காயமடைய, அவரின் பந்துகளை விராட் கோலி வீசினார். கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பின் அவர் பந்துவீசியது ரசிகர்களிடையே உற்சாகத்தை தந்தது. ஒருசில ஒருங்கிணைப்பின்மை மற்றும் தகவல் மாறுபாடுகள் காரணமாக சிறுபிள்ளைத்தனமான விளையாட்டை காணவும் நேரிட்டது.