அக்டோபர் 19, சென்னை (Chennai News): சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமாடுகள், வீதிகளில் திரியும் எருமைகளின் எண்ணிக்கை சற்றே அதிகம் என கூறலாம். பால் உற்பத்திக்காக வீடுகளில் அல்லது பண்ணைகளில் பசுக்களை வளர்க்கும் பலரும், அதனை மேய்ச்சலுக்காக வீதிகளில் திறந்துவிடுகின்றனர்.
எப்போதும் பரபரப்புடன் காணப்படும் சென்னை நகரின் முக்கிய சாலைகள் முதல் புறநகர் சாலைகளில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் பண்ணைகளின் உரிமையாளர்கள் செய்யும் சர்ச்சை செயலால், அவ்வப்போது அப்பாவி பொதுமக்களின் உயிரும் கேள்விக்குறியாகி வந்தது.
சாலைகளில் செல்வோரை தாக்குவது, துரத்துவது, போக்குவரத்தை மறித்து இடையூறு செய்வது என மாடுகள் செய்து வந்த சேட்டைகள் ஏராளம். சிலர் விபத்தில் சிக்கவும் செய்தனர். இதனால் சென்னை மாநகர அதிகாரிகள், தெருவில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களை கண்டித்து பின் மாடை விடுவித்து வந்தனர். Heart Attack Kills: நடுரோட்டில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்; அதிரவைக்கும் காட்சிகள் உள்ளே.!
மாட்டின் உரிமையாளர்கள் தொடர்ந்து திருந்தாமல் இருந்ததால், அபராத தொகையை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உயர்த்திய அதிகாரிகள், இனி மாநகராட்சி அதிகாரிகளால் படிக்கப்படும் மாடுகள் அனைத்தும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பகுதிகளுக்கு கொண்டு சென்று விடப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக இருக்கும் திருவெல்லிக்கேணி பகுதியில், சாலையில் இருந்த மாடு ஒன்று அவ்வழியே சென்ற முதியவரை தாக்கியது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை நேரில் பார்த்த பலரும், முதியவருக்கு உதவி செய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரியவரவே, அதிகாரிகள் மாட்டின் உரிமையாளருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.
Watch: Stray cattle attacks elderly person on Chennai road.
The incident happened on Wednesday after which the 80-year-old was admitted to a hospital. The owner of the cattle was arrested by the police. #Chennai #CCTV #CCTVFootage pic.twitter.com/OOhsdrnayw
— Vani Mehrotra (@vani_mehrotra) October 19, 2023