Jadeja Dedicates Man of the Match Award to Wife: ஆட்ட நாயகன் விருது மனைவிக்கு அர்ப்பணிப்பு: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜடேஜா.!
மூன்றாவது டெஸ்ட் தொடரில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா, தனது வெற்றியை மனைவிக்கு அர்ப்பணித்தார்.
பிப்ரவரி 19, ராஜ்கோட் (Sports News): இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றிபெற்றதை தொடர்ந்து, நடப்பு இந்தியா - இங்கிலாந்து (IND Vs ENG Test Series) அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், இந்தியா 2 புள்ளிகள் பெற்று முன்னிலை வகித்துள்ளது. இங்கிலாந்து முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்று ஒரு புள்ளி பெற்றுள்ளது. எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் இந்தியா வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணியும் இந்திய மண்ணில் தோல்வியை தழுவக்கூடாது என்ற முனைப்புடன் தீவிரமாக விளையாடி வருகிறது. Cauliflower Mint Rice: புற்றுநோயை விரட்ட, நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் காலிப்ளவர் - புதினா சாதம் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
இந்தியா அபார வெற்றி: மூன்றாவது டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 430 ரன்னும் எடுத்து அசத்தியது. அதேவேளையில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 122 ரன்களும் எடுத்து இலக்கை எட்ட இயலாமல் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் ரோஹித் சர்மா (Rohit Sharma), ஜடேஜா (R Jadeja) சதத்தை கடந்தனர். யஜஷ்வி ஜெய்ஷ்வால் இரட்டை சதங்களை கடந்து அசத்தி இருந்தார். பந்துவீச்சில் முகம்மது சிராஜ், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அதிக விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இந்த ஆட்டத்தில் தான் அஸ்வின் டெஸ்ட் தொடரில் தனது 500வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Women Fired Car: சிகிரெட் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்; காரை கொளுத்திவிட்ட இளம்பெண்.. பகீர் காட்சிகள் வைரல்.!
ஆட்டநாயகனாக ஜடேஜா: இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் முதல் இன்னிங்சில் பென் டக்கெட் மட்டும் சதத்தை கடந்து இருந்தார். வேறு யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. பந்துவீச்சில் மார்க் வுட், ரெஹான் அகமத், டாம் ஹெர்லி ஆகியோர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இப்பூட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கிய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியை அவர் தனது மனைவி ரிவபா-வுக்கு அர்ப்பணித்து நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தினார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜடேஜா, தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிவபா குஜராத் மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.