Mint Rice | Cauliflower (Photo Credit: Youtube / Pixabay)

பிப்ரவரி 19, சென்னை (Health Tips): புற்றுநோயை குறைப்பதிலும், அந்நோய் வராமல் தடுப்பதிலும் சிறப்புடன் செயல்படும் காலிப்ளவர், தன்னுள் வைத்திருக்கும் சல்போராபேன் எனப்படும் வேதிப்பொருளால் அதனை சாத்தியமாக்குகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோய் செல்களின் அடிப்படை வளர்ச்சியை தனது கட்டுக்குள் வைக்கிறது. காலிபிளவரை புதினவுடன் சேர்த்து சமைத்து சாப்பிட, உடல் நலன்பெறும், உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும். இன்று காலிப்ளவர் - புதினா சாதம் செய்வது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

காலிப்ளவர் புதினா (Cauliflower Puthina Sadam) சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

✅ காலிப்ளவர் நறுக்கியது - ஒரு கிண்ணம்,

✅ சாதம் - ஒரு கிண்ணம்,

✅ பெரிய வெங்காயம் பொடிய நறுக்கியது - ஒன்று,

✅ பச்சை மிளகாய் - தேவையான அளவு,

✅ இஞ்சி - பூண்டு விழுது - ஒரு கரண்டி,

✅ புதினா - கைப்பிடியளவு,

✅ எண்ணெய் & உப்பு - தேவையான அளவு.

காலிப்ளவர் - புதினா சாதம் செய்முறை:

👉 முதலில் எடுத்துக்கொண்ட காலிப்பவரை உப்பு கலந்து வெந்நீரில் 2 நிமிடம் சேர்த்து எடுக்க வேண்டும். புதினாவை பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

👉 பின் வானெலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவை வதங்கியதும் அரைத்த புதினா கொத்துடன் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவை நன்கு வதங்கியதும் காலிப்ளவர் சேர்த்து கிளற வேண்டும்.

👉 காலிப்ளவர் வதங்குவது போல தெரிந்ததும் வடித்த சாதத்தை சேர்த்து கிளறி இறக்க, சுவையான காலிப்ளவர் - புதினா சாதம் தயார்.