பிப்ரவரி 19, ஜெருசலேம் (World News): இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலேம் பகுதியில் செயல்பட்டு வரும் எரிபொருள் நிலையத்தில், காரில் வந்த நபர் தனது காருக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு இருந்தார். அச்சமயம் அங்கு வந்த பெண்மணி ஒருவர் சிகிரெட் கேட்டார். பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்தவர் சிகிரெட் கொடுக்க மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த பெண்மணி எரிபொருள் நிரப்பும்போது தீ வைத்தார். இதனால் மளமளவென தீ பரவியது. அங்கிருந்தவர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக மனித உயிர்களும் காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது இந்த வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. Paytm Fastag: பேடிஎம் பாஸ்ட்டேக் பரிவர்த்தனைகளுக்கு ஆப்பு; பட்டியலில் இருந்து தூக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்..!
Woman asks man for a cigarette, when he refuses she lights his car on fire 😬 pic.twitter.com/iH7YHI8Pbq
— non aesthetic things (@PicturesFoIder) February 16, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)