IND Vs ENG Test: ரன்களை குவிக்க முடியாமல் திணறும் இங்கிலாந்து; மதியத்திற்குள் 5 விக்கெட் காலி.. புதிய சாதனை படைத்த அஸ்வின்.. விபரம் உள்ளே.!
எஞ்சிய ஆட்டத்தின் முடிவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பிப்ரவரி 23, ஜார்கண்ட் (Cricket News): இந்தியா வந்துள்ள இங்கிலாந்து (IND Vs ENG Test Matches) கிரிக்கெட் அணி, இன்று நான்காவது டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜெ.எஸ்.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றியடைந்து, 2 புள்ளிகள் முன்னிலை பெற்று இருக்கிறது. முதல் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. Photos-Videos Of Living Object Ban By Taliban: மனிதர்கள் புகைப்படம் எடுத்தால் கடுமையான தண்டனை; ஆப்கானிஸ்தானில் சட்டம் அமல்., தலிபான் அறிவிப்பு.!
அடுத்தடுத்து 5 விக்கெட்: இந்நிலையில், இன்று தொடங்கிய நான்காவது தொடரின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டத்தை இழந்ததால், மதியத்திற்குள் 5 விக்கெட்டுகள் பறிபோனது. ஜாப் 42 பந்துகளில் 42 ரன்கள் அடித்து கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். பென் டக்கட் 21 பந்துகளில் 11 ரன் அடித்து வெளியேறினார். ஒல்லி போப் 2 பந்துகளில் ரன்கள் அடிக்காமல் வெளியேறினார். ஜானி 35 பந்துகளில் 38 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். பென்6 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்தார். Indian Origin Student Died in US: அமெரிக்காவில் தொடரும் சோகம்.. மாயமான இந்திய வம்சாவளி கல்லூரி மாணவரின் சடலம் மீட்பு.! கண்ணீரில் பெற்றோர்.!
ஆட்டத்தின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு: உணவு இடைவேளைக்கு முன்பு 24.1 ஓவர் முடிவில் ஓவர்கள் முடிவில் 112 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணி எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து, மதியம் 2 மணிக்குள் 60 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. ஐந்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் எஞ்சிய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வைத்து இங்கிலாந்து அணி ரன்களை குவிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றுவிட்டால், நடப்பு தொடரின் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்லும். மாறாக இந்தியா நான்காவது போட்டியில் தோல்வி அடைந்தால், இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் ஆட்டத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.
புதிய சாதனை படைத்த அஸ்வின்: அதேபோல, கடந்த ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் (R Ashwin) டெஸ்ட் தொடரில் தனது 500வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தி இருந்தார். இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தனது 100 வது விக்கெட்டை காப்பாற்றி சாதனை படைத்தது இருக்கிறார். இது அஸ்வினின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.