பிப்ரவரி 23, இல்லினாயாஸ் (World News): அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணம், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இந்திய வம்சாவளி மாணவர் அகுல் தவான் (வயது 18). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இரவு நேரத்தில் நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அலட்சியத்தால் நடந்த சோகம்? வெளியில் சென்றவர் கடுமையான உறைபனி (Missing Indian Student Akul Dhawan) காரணமாக பாதிக்கப்பட்டு மாயமாகி இருக்கிறார். அவரை காணாது தேடிய பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் பெயரளவுக்கு தேடிவிட்டு பின் அமைதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. MH FDA Close MC Donald Restaurant: தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரித்து வழங்கிய மெக் டொனால்ட்; இழுத்து பூட்டிய அதிகாரிகள்.!
மாணவரின் சடலம் கண்டெடுப்பு: இதனிடையே, உறைபனியில் சிக்கித் தவித்த நபர், இறுதியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், அவரின் உடல் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இதன் வாயிலாக இந்திய மாணவரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை பொருத்தமட்டில் இந்திய மாணவர்களின் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
தொடரும் சோகங்கள்: 2024ம் ஆண்டு தொடங்கியுள்ள இரண்டு மாதத்தின் முடிவிற்குள்ளேயே, சமீபத்தில் என 7 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்கள் உயிரிழந்து இருக்கின்றனர். சில இடங்களில் இனரீதியான வன்முறை அவர்களின் கொலைக்கும் காரணமாக அமைந்துள்ளது.