Afghanistan Flag Photo Capture (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 23, காபூல் (World News): கடந்த 2021ம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா - இங்கிலாந்து தலைமையிலான நேட்டோ படைகள் முழுவதும் தங்களின் படைகளை விலக்கிக்கொண்டதை தொடர்ந்து, அந்நாட்டில் தலிபான் ஆட்சி கொண்டு வரப்பட்டது. அமெரிக்காவை கடுமையாக எதிர்த்து வந்த தலிபான், அமெரிக்கா தனது தாயகம் விட்டு சென்றதும் அமைதியாக இருந்து வருகிறது. அந்நாட்டின் அதிபராக பணியாற்றி வந்த அஷ்ரப் கனி, தனது குடும்பத்தினருடன் ஐக்கிய அமீரகத்திற்கு சென்று குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்.

அகதியாக குடிபெயரும் ஆப்கானிய மக்கள்: தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களுக்கு பழைய முறையிலான கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தலிபான்களின் முந்தைய செயல்பாடுகளால் கடுமையான சோகத்திற்கு சென்ற மக்கள், அகதியாகவும் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். அந்நாட்டு தேவையான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து மத்திய அரசு செய்து வருகிறது. அவ்வப்போது அங்கு மக்களுக்கு என நடைமுறைப்படுத்தப்படும் சட்டம் கண்டனத்தையும் குவிக்கும். Indian Origin Student Died in US: அமெரிக்காவில் தொடரும் சோகம்.. மாயமான இந்திய வம்சாவளி கல்லூரி மாணவரின் சடலம் மீட்பு.! கண்ணீரில் பெற்றோர்.! 

போட்டோ எடுக்க தடை விதிப்பு: திருமணம் ஆகாத பெண்கள் தொலைதூர பயணம் செய்ய கூடாது, பெண்கள் தனியே செல்லக்கூடாது உட்பட பல்வேறு சட்டங்கள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் உயிருள்ள பொருட்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க கூடாது. மனிதர்கள் புகைப்படம் எடுத்து, தன்னை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வதை தவிர்க்க தலிபான் அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஷரியாவின் படி கடும் நடவடிக்கை: அரசின் உத்தரவை மீறி செயல்படும் நபர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் பட்சத்தில், அவர்கள் ஷரியா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். சிறை தண்டனைக்கும் போட்டோ, வீடியோ எடுக்கும் செயல் வழிவகை செய்யும். மக்கள் அனைவரும் கவனமுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தலிபான்களின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை அளித்துள்ளது.