IML T20 2025: மாஸ்டர்ஸ் லீக் 2025: கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உங்களின் நாயகர்கள் மீண்டும் களத்தில்.. நாளைய போட்டி விபரம்.. முழு தகவல் இதோ.!
எப்போதும் மக்களின் ஆர்வம் கிரிக்கெட் விளையாட்டில் அதிகம் இருக்கும் நிலையில், சர்வதேச அளவில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் இணையும் போட்டி நடைபெறுகிறது.
பிப்ரவரி 21, மும்பை (Sports News): கிரிக்கெட் ரசிகர்களுக்காக மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக விளங்கி, பின் வயது உட்பட பிற விஷயங்களில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிக் கொண்ட கிரிக்கெட் வீரர்களை இணைக்க சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டிகள் 2025 (International Masters League T20 2025) அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை (22 பிப்ரவரி 2025) முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டி தொடங்கி நடைபெறவுள்ளது. இந்தியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணி என ஆறு அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி டி20 முறையில் நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும், சர்வதேச அளவிலான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் ஆவார்கள். ரசிகர்களால் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் குமார் சங்கரகரா உட்பட பலரும் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். RCB Vs MI Highlights: பெங்களூரை சொந்த மண்ணில் கதறவிட்ட மும்பை.. திரில் வெற்றி.. பெங்களூர் முதல் தோல்வி.!
அணி & கேப்டன்கள் விபரம்:
மொத்தமாக 14 போட்டிகள் நடைபெறும் இந்த ஆட்டம் நவி மும்பை, ராஜ்கோட் மற்றும் ராய்பூர் ஆகிய இடங்களில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டிகளை கலர்ஸ் சினிபிளெக்ஸ் (Colors Cineplex) தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் (Jio Hot Star) பக்கத்தில் பார்க்கலாம். சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டியின் கேப்டன்களாக இந்தியா மாஸ்டர்ஸ் (Indian Masters) அணிக்கு (Sachin Tendulkar) சச்சின் டெண்டுல்கர், இலங்கை அணிக்கு குமார் சங்கரகரா, மேற்கிந்திய தீவுகள் @ வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரயன் லாரா, ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன், தென்ஆப்பிரிக்க அணிக்கு ஜாக் காலிஸ், இங்கிலாந்து அணிக்கு மோர்கன் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். AFG Vs SA Highlights: ஆப்கானிஸ்தானை பொளந்துகட்டிய தென்னாபிரிக்கா.. திணறத்திணற வெளுத்து வாங்கிய சம்பவம்.. மாஸ் வெற்றி.!
நவிமும்பையில் நடைபெறும் ஆட்டங்கள் பின்வருமாறு.,
போட்டிக்கான அட்டவணையை பொறுத்தவரையில், 22 பிப்ரவரி 2025 முதல் நடைபெறும் ஆட்டம் நவி மும்பை கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள், 24 பிப்ரவரி 2025 மேற்கிந்திய தீவுகள் - ஆஸ்திரேலியா அணிகள், 25 பிப்பவரி 2024 இந்தியா - இங்கிலாந்து அணிகள், 26 பிப்ரவரி 2025 தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள், 27 பிப்ரவரி 2025 மேற்கிந்திய தீவுகள் - இங்கிலாந்து மோதுகிறது. India Vs Pakistan Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி.. நேரலை பார்ப்பது எப்படி? அசத்தல் தகவல் இங்கே.!
ராஜ்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டங்கள் பின்வருமாறு.,
28 பிப்ரவரி 2025 இலங்கை - ஆஸ்திரேலியா, 01 மார்ச் 2025 இந்தியா - தென்ஆப்பிரிக்கா, 03 மார்ச் 2025 தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து, 05 மார்ச் 2025 இந்தியா - ஆஸ்திரேலியா, 06 மார்ச் 2025 மேற்கிந்திய தீவுகள் - இங்கிலாந்து, 07 மார்ச் 2025 ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ENG Vs AUS Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? வானிலை நிலவரம் என்ன? விபரம் உள்ளே.!
ராய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டங்கள் பின்வருமாறு.,
8 மார்ச் 2025 இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள், 10 மார்ச் 2025 இங்கிலாந்து - இந்தியா அணிகள், 11 மார்ச் 2025 மேற்கிந்திய தீவுகள் - தென்னாப்பிரிக்கா அணிகள், 12 மார்ச் 2025 இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ராய்ப்பூரில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள்:
13 மார்ச் 2025 -அரையிறுதி 1
14 மார்ச் 2025 - அரையிறுதி 2
16 மார்ச் 2025 - இறுதி போட்டி
போட்டியில் கலந்துகொள்ளும் அணிகளும், அதன் வீரர்கள் பட்டியலும்:
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 போட்டி விபரங்கள் (International Masters League IML 2025 Matches Schedule in Tamil):
இந்தியா மாஸ்டர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம் (India Masters 2025 Team India Squad):
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)