
பிப்ரவரி 21, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 (ICC Champions Trophy 2025) கிரிக்கெட் தொடரில், இந்திய அணி பங்கேற்கும் போட்டி போட்டி மட்டும் துபாய் நாட்டில் நடைபெறுகிறது. அந்த வகையில், துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில் (India Vs Bangladesh ICC Champions Trophy 2025), இந்திய கிரிக்கெட் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் (India Pakistan Cricket Match) அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம், 23 பிப்ரவரி 2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி எப்போது?
பிப்ரவரி 23 அன்று நண்பகல் 02:30 மணிக்கு மேல் ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது. அன்றைய நாளின் வானிலை பகல் நேரத்தில் 33 டிகிரி செல்சியஸ், இரவு நேரத்தில் 20 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றின் வேகம் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகம் இருக்கும் என்றும் அன்றைய நாளில் மழைக்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில், தற்போது சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டி கவனம் பெற்றுள்ளது. பிசிசிஐ நிர்வாகம் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு கருதி, இந்திய வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப இயலாது என திட்டவட்டமாக மறுத்ததால், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி போட்டித்தொடரை தலைமையேற்று நடத்தும் பாகிஸ்தான், இந்தியா பங்கேற்கும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ENG Vs AUS Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? வானிலை நிலவரம் என்ன? விபரம் உள்ளே.!
ரோகித் சர்மா Vs முகமது ரிஸ்வான் (Rohit Sharma vs Mohammad Rizwan):
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் இந்தியாவுடன் மோதும் போட்டிக்காக துபாய் சென்றுள்ளது. நாளை மறுநாள் தொடங்கி நடைபெறும் ஆட்டத்தை காண இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஹிட்மேன் ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய தேசிய கிரிக்கெட் அணி - முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணி வீரர்கள் விபரம் (Team India Playing Squad):
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer), சப்மன் கில் (Shubman Gill), விராட் கோலி (Virat kohli), அக்சர் படேல் (Axar Patel), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), வாஷிங்க்டன் சுந்தர் (Washington Sundar), கேஎல் ராகுல் (KL Rahul), ரிஷப் பண்ட் (Rishabh Pant), அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), ஹர்ஷித் ராணா (Harshit Rana), குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), முகமது ஷமி (Mohammad Shami), வருண் சக்கரவர்த்தி (Varun Chakaravarthy) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணி வீரர்கள் விபரம் (Team Pakistan Playing Squad):
முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாம் (Babar Azam), இமாம்-உல்-ஹக் (Imam Ul Haq), கம்ரன் குலாம் (Kamran Ghulam), சவுத் ஷகீல் (Saud Shakeel), தையப் தகீர் (Tayyab Tahir), பர்ஹீம் அஸ்ரப் (Faheem Ashraf), குஷ்தில் ஷா (Khushdil Shah), சல்மான் ஆகா (Salman Agha), உஸ்மான் கான் (Usman Khan), அப்ரார் அஹ்மத் (Abrar Ahmed), ஹாரிஸ் ரவுப் (Haris Rauf), முகம்மத் ஹஸ்னைன் (Muhammad Hasnain), நசீம் ஷா (Nasem Shah), ஷாகீன் அப்ரிடி (Shaheen Afridi) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.