Jos Buttler & Steve Smith (Photo Credit: @ICC X)

பிப்ரவரி 21, கராச்சி (Sports News): 29 ஆண்டுகளுக்கு பின்னர் பாக்கிஸ்தான் நாட்டில் ஐசிசி சாம்பியன் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பாக்கிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் (PAK Vs NZ Champions Trophy 2025) மோதிக் கொண்ட முதல் ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, துபாயில் நடைபெற்ற இந்தியா - வங்கதேசம் அணிகள் (India Vs Bangladesh Champions Trophy 2025) இடையேயான மோதலில், வங்கதேச கிரிக்கெட் அணி போராடி தோல்வி அடைந்தது, இந்தியா வெற்றி அடைந்தது. மூன்றாவது ஆட்டம் தென்ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு (SA Vs AFG Cricket) இடையே இன்று (பிப்.21) நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து Vs ஆஸ்திரேலியா (England Vs Australia Cricket):

அதனைத்தொடர்ந்து, சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் நான்காவது ஆட்டம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் காதாபி கிரிக்கெட் மைதானத்தில் (Gaddafi Stadium, Lahore), 22 பிப்ரவரி 2025 (நாளை) நண்பகல் 02:30 மணியளவில் ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது. ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) தலைமையிலான ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி - ஜோஸ் பட்லர் (Jos Buttler) தலைமையிலான இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியம் ஆட்டத்தில் மோதுகிறது. கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக கருதப்படும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளின் ஆட்டம், ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. AFG Vs SA: சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று தென்னாபிரிக்கா பேட்டிங் தேர்வு., ஆப்கான்., பந்துவீச்சு.. அணி வீரர்கள் விபரம் இதோ.! 

நேரலை & வானிலை நிலவரம்:

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (Australia Vs England) அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறும் லாகூர் (Lahore Weather) மைதானத்தில், நாளைய வானிலையைப் பொறுத்தவரையில், பகல் நேரத்தில் வெப்பநிலை 22 டிகிரி செல்சியசும், இரவு நேரத்தில் குளிர் 11 டிகிரி செல்சியசும் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு எட்டு கிலோமீட்டர் என்ற நிலையில் இருக்கும். மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் 'ஏ' பிரிவில் இருக்கும் அணிகள் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொண்ட நிலையில், குரூப் 'பி' பிரிவில் இருக்கும் அணிகள் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தை இந்தியாவில் இருந்தபடி ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும் நேரலையில் காணலாம்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் விபரம்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சார்பில் (Team England Squad for ICC Champions Trophy 2025) பென் டக்கட் (Ben Duckett), ஹாரி புரூக் (Harry Brook), டாம் பான்டான் (Tom Banton), ஜேமி ஒவர்டன் (Jamie Overton), ஜோ ரூட் (Joe Root), லியம் லிவிங்ஸ்டன் (Liam Livingstone), ஜேமி ஸ்மித் (Jamie Smith), ஜோஸ் பட்லர், பில் சால்ட் (Phil Salt), ஆதில் ரஷீத் (Adil Rashid), ப்ரைடன் கார்ஸ் (Brydon Carse), கஸ் அட்கின்சன் (Gus Atkinson), ஜோப்ரா ஆர்ச்சர் (ஜோபிற Archer), மார்க் வுட் (Mark Wood), சபிக் மெஹ்மூத் (Saqib Mahmood) ஆகியோர் விளையாடுகின்றனர். அணியை ஜோஸ் பட்லர் வழிநடத்துகிறார். RCB Vs MI WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ்; பெண்கள் பிரீமியர் லீக் 2025.. உங்கள் பெங்களூரில் இன்று.! 

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் விபரம்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சார்பில் (Team Australia Squad for ICC Champions Trophy 2025) ஜேக் பிரஸர் மெக்குர்க் (Jake Fraser-McGurk), ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith), டார்விஸ் ஹெட் (Tarvis Head), மார்ன்ஸ் லபுஷக்னே (Marnus Labuschagne), ஆரோன் ஹார்டி (Aaron Hardie), கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell), மேத்திவ் ஷார்ட் (Matthew Short), அலெக்ஸ் காரே (Alex Carey), ஜோஷ் இங்கிலீஸ் (Jos Inglis), ஆடம் ஜாம்பா (Adam Zampa), பென் டவர்ஷுய்ஸ் (Ben Dawarshuis), நாதன் எல்லிஸ் (Nathan Ellis), சியான் அப்போட் (Sean Abbott), ஸ்பென்ஸர் ஜான்சன் (Spencer Johnson), தன்வீர் சங்கா (Tanveer Sangha) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்கள்:

இங்கிலாந்து அணியின் சார்பில் களமிறங்கவுள்ள வீரர்கள் தொடர்பான அறிவிப்பு:

இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள்: