LSG Owner Intense Conversation with KL Rahul: கே.எல் ராகுலிடம் தோல்வி குறித்து கடும் விவாதம் செய்த லக்னோ அணியின் உரிமையாளர்.!
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த லக்னோ அணி, நேற்றைய போட்டியில் தோல்வியடைந்து அடுத்த இடத்திற்கு பின்தங்கிய காரணத்தால் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு கேள்விக்குறியாகி வருவதால், அந்த அணியின் உரிமையாளர் கோபமடைந்தார்.
மே 09, ஹைதராபாத் (Cricket News): ஐபிஎல் 2024 (IPL 2024) தொடரின் 57வது ஆட்டம், நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (LSG Vs SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் முக்கிய வீரர்கள், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் அணி ரன்கள் அடிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில், அதிகபட்சமாக கே.எல் ராகுல் 33 பந்துகளில் 29 ரன்கள் அடித்திருந்தார், நிக்கோலஸ் பூரான் 26 பந்துகளில் 48 ரன்கள், ஆயுஷ் பதொனி 30 பந்துகளில் 55 ரன்கள் அடித்திருந்தார். ஆட்டத்தின் முடிவில் நான்கு விக்கெட்டை இழந்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் சார்பில் பந்து வீசியவர்களில் புவனேஸ்வர் குமார் தான் வீசிய நான்கு ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்து 12 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். Akshaya Tritiya 2024: அட்சய திரிதியை கொண்டாடப்படுவது ஏன்? தங்கம் வாங்க மட்டுமா?.. இவ்வுளவு முக்கியமான விசேஷ நாளா இது?.!
லக்னோ) அணியின் படுதோல்வியும், ஹைதராபாத் அணியின் அசத்தல் வெற்றியும்: அதனைத்தொடர்ந்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இறுதிவரை நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதிரடி ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் டார்விஸ் ஹெட் ஜோடி தாங்கள் எதிர்கொண்ட பந்துகளில் சிக்ஸர் மற்றும் ஃபோர்களை விலாசி அணியை ஒரு விக்கெட் கூட இழப்பு இல்லாமல் வெற்றி பாதைக்கு கூட்டிச்சென்று அணியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினர். இதில் அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 75 ரன்கள் அடித்திருந்தார், எட்டு ஃபோர்களும் ஆறு சிக்ஸர்களும் இதில் அடங்கும். அதேபோல, டார்விஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்களை அடித்திருந்தார், அதில் 8 ஃபோர்களும், 8 சிக்சரும் அடங்கும். Car Ran Into The Temple: காருக்கு பூஜை போட கோவிலுக்கு காரில் வந்த நபர்.. கட்டுபாட்டை இழந்து கோவிலுக்குள் புகுந்த கார்.. வைரலாகும் வீடியோ..!
தோல்வியால் கொதித்துப்போன லக்னோ அணியின் உரிமையாளர்: இறுதியாக 9.4 ஓவரில் ஹைதராபாத் அணி 167 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. ஆட்டநாயகனாக டார்விஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார். போட்டியின் முடிவு லக்னோ அணிக்கு பெரும் சோகத்தை தந்தது. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு செல்லவேண்டிய லக்னோ அணி, தற்போது 6 வது இடத்தில் இருக்கிறது. தான் எதிர்கொண்ட 12 போட்டிகளில் லக்னோ அணி 6ல் வெற்றி, 6ல் தோல்விகண்டுள்ளது. நேற்றைய படுதோல்வி காரணமாக லக்னோ உரிமையாளர், தனது அணியின் கேப்டன் கே.எல் ராகுலுடன் உரையாடலில் ஈடுபட்ட சம்பவமும் மைதானத்திலேயே நடந்துள்ளது. Man Dies of Electrocution: மழையின் போது மின்கம்பத்தில் கை வைத்த நபர்.. சம்பவயிடத்திலேயே மின்சாரம் தாக்கி பலி.. வைரலாகும் வீடியோ..!
கே.எல் ராகுலுடன் கடும் வாதம்: மேலும், முக்கியமான இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனது அணியில் கேப்டனிடம் வாதங்கள் செய்ததாக தெரிய வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவ்வாறான வாதங்கள் அனைத்தும் திரைக்கு பின்னால் நடக்க வேண்டும் என வர்ணனையாளரும் குறிப்பிட்டார்.