Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி.. இந்திய அணியின் தலைவரான ககன் நரங்..!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Gagan Narang (Photo Credit @TheKhelIndia X)

ஜூலை 09, மும்பை (Mumbai): பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி (Paris Olympics) நடைபெற உள்ளது. இதற்கான துவக்க விழா வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கு தலைவராக துப்பாக்கிச்சுடும் வீரர் ககன் நரங் (Gagan Narang) தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் விழாவில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுடன் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் இணைந்து இந்திய அணி சார்பில் தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Assam Flood: முக்கிய நதிகளில் வெள்ளம்.. வரலாறு காணாத கனமழையால் மூழ்கிய அசாம்..!

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 28 தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் இருந்து பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வீரரான ஆல்ட்ரின், வித்யா ராம்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றிலேயே தடகளத்தில் ஆறு வீரர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif