World Chess Championship: உலக செஸ் சாம்பியன்ஷிப்.. எங்கு நடைபெற உள்ளது?

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது.

Chess (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 16, சிங்கப்பூர் (Sports News): இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ், நடப்பு உலக சாம்பியனான 31 வயதான சீனாவின் டிங் லிரென் ஆகியோர் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமையை சிங்கப்பூர் பெற்று இருந்த நிலையில், இந்த போட்டி வரும் நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை சிங்கப்பூரில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் நடைபெறும் என சிங்கப்பூர் செஸ் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. Morne Morkel Appointed As India's Bowling Coach: பாகிஸ்தான் முன்னாள் கோச் மோர்னே மோர்கல்.. இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்..!

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 138 ஆண்டுகால வரலாற்றில் தென்கிழக்கு ஆசியாவில் இப்போட்டி நடைபெறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 1978-ல் இந்தத் தொடர் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகுயோ நகரில் நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.