![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2024/08/morne-morkel--380x214.jpg)
ஆகஸ்ட் 15, டெல்லி (Cricket News): டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா அணி வென்றதை அடுத்து ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சி குழு வெற்றியுடன் விலகியது. இதனை அடுத்து புதிய அத்தியாயத்தை இந்திய கிரிக்கெட் தொடங்கும் விதமாக கம்பீர் (Gautam Gambhir) தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் (Morne Morkel) இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Praggnanandhaa Loses Consecutively In St Louis Chess 2024: செயின்ட் லூயிஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா தொடர் தோல்வி..!
மோர்னே மோர்கல்: 39 வயதான மார்னே மார்க்கல் இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 309 விக்கெட்டுகளையும், 117 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 188 விக்கெட்களையும் 44 சர்வதேச டி20 போட்டிகள் விளையாடி 47 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்கள். மேலும் ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு பல இளம் வீரர்களை வழி நடத்தி இருக்கிறார். பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்பட உள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு பயிற்சியாளர்களாக கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.