Car Accident: உளுந்தூர்பேட்டை மேம்பாலத்தில் விபத்து... விபத்தில் காவலர், அவரது மனைவி உயிரிழப்பு..!

உளுந்தூர் பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

Accident File Pic (Photo Credit: PTI)

ஜனவரி 22, கள்ளக்குறிச்சி (Kallakurichi): சென்னை தாம்பரம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). இவர் தாம்பரம் நகர காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணி செய்து வந்தார். இவரது மனைவி வினோதினி (வயது 30). இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருச்சியில் உள்ள வினோதினியின் தாயார் வீட்டிற்கு காரில் சென்றனர். Virat Kohli Out of First 2 Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 ஆட்டங்களில் இருந்து விலகிய விராட் கோலி; பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்.!

அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை (Ulundurpet) அருகே திடீரென காரின் வலது பக்க டயர் வெடித்ததில் கட்டுபாட்டை இழந்து, கார் எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காவலர் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.