ஜனவரி 22, புதுடெல்லி (New Delhi): இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஜனவரி 25ம் தேதி முதல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் (IND Vs ENG Test Series) தொடரில் விளையாடுகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் ஜனவரி 25ல் தொடங்கி 29 வரை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது ஆட்டம் பிப்ரவரி மாதம் 02ம் தேதி தொடங்கி 09 வரை விசாகப்பட்டினத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
இந்திய அணி: 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பிசிசிஐ சார்பில் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்திய அணியின் பட்டியலில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், கே.எஸ்.பாரத், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
விராட் கோலி விலகல்: நேற்று இங்கிலாந்து அணி ஹைதராபாத் வருகை தந்த நிலையில், ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி தனது பயிற்சியை தொடங்கியது. இந்நிலையில், விராட் கோலி (Virat Kohli) நடப்பு இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் 2 டெஸ்ட் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருக்கிறது. இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. அவர் எதற்காக போட்டியில் இருந்து விலகினார் என்பது குறித்த விபரம் இல்லை.
ரசிகர்கள் வருத்தம்: பிசிசிஐ தற்போது வரை எஞ்சிய பிற போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிடாமல் இருப்பதால், முதல் 2 போட்டிகளில் மட்டும் விராட் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தனிப்பட்ட காரணத்திற்காக போட்டியில் இருந்து விலகினாலும், அணி தனது சிறந்த செயல்பாடுகளை மைதானத்தில் வெளிப்படுத்தும் என்றும் பிசிசிஐ விளக்கி இருக்கிறது. இந்த அறிவிப்பு அவரை களத்தில் காணநினைத்த ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.