Robbery Attempt Captured on Dashcam: கேமிராவில் பதிவான வழிப்பறி கொள்ளை முயற்சி; இராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்.!

விசாரணையில் பேராசை பெருநஷ்டமான தகவல் அம்பலமாகி இருக்கிறது.

Coimbatore Robbery Attempt (Photo Credit: @wilson__thomas X)

ஜூன் 17, மதுக்கரை (Coimbatore News): கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் (Ernakulam) பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லம் சித்திக். இவர் விளம்பர தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் பெங்களூரில் இருந்து, தனது நிறுவனத்திற்கு தேவையான கணினி உட்பட மின்னணு சாதனங்களை வாங்கிக்கொண்டு காரில் நண்பர்களுடன் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்தார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை (Coimbatore Madukkarai Toll Plaza) சுங்கச்சாவடிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, இவரது காரை துரத்தி வந்த மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கார் கேமிராவில் (Car Dashcam Capture Robbery) பதிவான பதைபதைப்பு காட்சிகள்:

சுதாரிப்புடன் செயல்பட்ட சித்திக், அங்கிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பி வந்து சுங்கச்சாவடியில் இருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். இவர்களை துரத்தி வந்த கும்பல் காவல்துறையினரிடம் (Coimbatore Police) சித்திக் பேசுவதை கண்டு அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சித்திக்கின் கார் கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகளும் வெளியாகி வைரலாகின.

4 பேர் கும்பல் அதிரடி கைது:

இதனையடுத்து, சேலம் - கொச்சி (Salem Kochin National Highway) தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி, பத்ரி நாராயணன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சார்ந்த 29 வயதுடைய சிவதாஸ், 27 வயதுடைய ரமேஷ் பாபு, பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய விஷ்ணு, 24 வயதுடைய அஜய் ஆகிய நான்கு பேரை அதிகாரிகள் கைது செய்தனர். Vanchinathan Memorial Day: வரலாற்றில் இன்று: வாஞ்சிநாதன் 113வது நினைவு தினம்.. சுதந்திர போராட்ட நாயகனின் வீரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.! 

பேராசை பெருநஷ்டம் ஆனது:

சம்பவத்தன்று இவர்கள் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த விளம்பர நிறுவன அதிபர் அஸ்லம் சித்திக்கின் காரில் முறைகேடான பணம் கொண்டுவரப்படுவதாகவும், அதனை கைப்பற்றினால் ஒரே நாள் இரவில் நாம் செட்டில் ஆகி விடலாம் என்ற ஆசையில் காரை வழிமறித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆனால், சித்திக் தனது காரில் கணினி உபகரணங்கள் வாங்கி வந்த நிலையில், மதுக்கரை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளதால் அதிகாரிகள் சோதனைக்கு பின்னரே காரை அனுப்பி வைத்துள்ளனர். இதனால் எந்த விதமான ஹவாலா பணமும் கிடைக்கவில்லை.

இராணுவத்தில் பணியாற்றியவரின் அதிர்ச்சி செயல்:

அரைகுறையாக கிடைத்த தகவலை வைத்து சித்திக்கின் காரை வழிமறித்து கும்பல், இவ்வாறான கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் உறுதியானதை தொடர்ந்து, இவர்கள் நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர் தற்போது சிறையில் அடைத்திருக்கின்றனர். மேலும், கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இந்த நால்வரில் விஷ்ணு ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில், ஏப்ரல் 4ம் தேதி விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார். விடுமுறைக்கு பின் பணிக்கு திரும்ப செல்லாத விஷ்ணு, தற்போது கொள்ளை செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.