Vanchi Maniyachchi | Freedom Fighter Vanchinathan (Photo Credit: Wikipedia)

ஜூன் 17, தூத்துக்குடி (Thoothukudi News): இந்திய சுதந்திரப் போராட்ட ஆர்வலரில் மிக முக்கியமானதாக கருதப்படுபவர் வாஞ்சிநாதன் (Vanchinathan). கடந்த 1886 ஆம் ஆண்டு, அன்றைய திருவிதாங்கூர் மாகாணத்தில், மாவட்டமாக இருந்த செங்கோட்டையில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் வாஞ்சிநாதன் என்ற சங்கரன். ரகுபதி ஐயர் - ருக்மணி தம்பதிக்கு மகனாக பிறந்தவர், சங்கரன் என முதலில் பெயரிடப்பட்டார்.

பாரதியுடன் பணியாற்றியவர், சுப்பிரமணிய ஐயரிடம் ஆயுதப்பயிற்சி:

செங்கோட்டையில் பள்ளி படிப்பை நிறைவு செய்த அவர், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் கல்லூரியில் பட்டமும் பெற்றார். முதலில் கணக்காளராக வாழ்க்கையை தொடங்கிய வாஞ்சிநாதன், பின்னாலில் வனத்துறையில் அரசு பதவிக்கு இணைந்தார். தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து ஆங்கிலேயருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வாஞ்சிநாதன், வெங்கடேச சுப்பிரமணிய ஐயரிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார். மேலும், நீலகண்ட பிரம்மச்சாரி, பாரதியாருடன் இந்தியா செய்தித்தாளில் துணை ஆசிரியராகவும் பணியாற்றி இருந்தார்.

குற்றாலத்தில் இந்தியர்களுக்கே தடை விதித்த வரலாறு:

அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ராபர்ட் அஷ் (Robert Ashe), வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களால் தொடங்கப்பட்ட கப்பல் போக்குவரத்தை முடக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். மேலும், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மீது தேசத்துரோக குற்றம் சாட்டி சிறையில் அடைத்தார். அதேபோல, குற்றாலத்தில் இந்தியர்கள் குளிக்க தடை என பல்வேறு அடக்குமுறைகளை ஆஷ் அடுத்தடுத்து முன்னெடுத்தார். EVM Machine Controversy: "மின்னணு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும்" - எலான் மஸ்கின் அதிர்ச்சி கருத்து.. ராகுல் காந்தியின் அதிரடி பதிவு.! 

இலக்கை வீழ்த்தி, தானும் உயிர்துறப்பு:

இதனால் அவரது செயல்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, புரட்சி பிரிவைச் சார்ந்த 25 வயது இளம் இளைஞர் வாஞ்சிநாதன் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின் வாஞ்சிநாதன் ஆசின் நடவடிக்கையை கண்காணித்து, ஜூன் 17, 1911 ஆம் ஆண்டு மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆட்சியராக ராபர்ட் ஆஷை இரயில் பயணத்திலேயே சுட்டுக்கொல்கிறார். பின் ஆங்கிலேயர்கள் கையில் நாம் சிக்கி உயிரிழக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த வாஞ்சிநாதன், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.

113 வது நினைவு தினம் இன்று:

இந்திய தேசத்திற்காக மகன் ஆங்கிலேயரை எதிர்த்து அவரை சுட்டுக் கொன்று இருந்தாலும், அவன் செய்தது தங்களது வழக்கத்திற்கு எதிரானது என்ற கருதிய வாஞ்சிநாதனின் தந்தை தனது மகனின் உடலை வாங்க மறுத்தார். பின் பாளையங்கோட்டை கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் தென்னிந்தியாவின் மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவராக அறியப்பட்ட வாஞ்சிநாதனின் மறைவு தினம், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 113 வது வாஞ்சிநாதன் (Vanchinathan Memorial Day 2024) நினைவு தினம் கொண்டாடப்படுகிறது.

அரசின் கெளரவம்:

வாஞ்சிநாதன் தனது வாழ்க்கையில் பொன்னம்மா என்ற பெண்ணை மனம் முடித்து இருந்தாலும், இந்திய தேசத்திற்காக 25 வயதில் உயிரை துறந்தார் இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துபோனது. இவரின் பெருமையை எதிர்கால சந்ததிகள் அறியும் பொருட்டு, தமிழ்நாடு அரசு மணியாச்சி இரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என்ற பெயரை சூட்டியது. 2013ம் ஆண்டு செங்கோட்டையில் வாஞ்சிநாதனுக்கு நினைவிடம் கட்டி திறக்கப்பட்டது.

சுதந்திரத்திற்காக தன்னுயிரையும், வாழ்நாளையும் நீத்த ஒவ்வொரு தியாகிகளும், நமது இந்திய தாய்த்திருநாட்டின் குலசாமிகளே!