Boy Dies By Dog Bite: வெறிநாய் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்..!

ராணிப்பேட்டையில் 4 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dog (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 14, அரக்கோணம் (Ranipet News): ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே 4 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி உயரிழந்தான். நிர்மல் (வயது 4) என்ற சிறுவன் கடந்த ஜூன் 27-ஆம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வெறிநாய் (Dog Bite) ஒன்று சிறுவனை கடித்தது. Murder Among Friends: சென்னை ஓட்டேரி ராயன் படம் பார்க்கும்போது தகராறு ; முன்விரோத கொலை..!

உடனடியாக சிறுவனை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்ததில் சிறுவனுக்கு ரேபிஸ் நோய்த்தொற்று (Rabies Virus) தாக்கியுள்ளது தெரியவந்தது. சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ரேபிஸ் நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால் சிறுவன் நிர்மல் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவனின் உடல் அமரர் ஊர்தியில் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், நேரடியாக சுடுகாட்டுக்கு கொண்டு சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.