A Baby Elephant: தாயை பிரிந்த குட்டி யானை – முதுமலை காப்பகத்தில் பராமரிப்பு..!

முதுமலை காப்பகத்துக்கு குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு கொண்டு சேர்த்தனர்.

Baby Elephant (Photo Credit: Pixabay)

மார்ச் 09, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் குட்டியுடன் வந்த தாய் யானை, வயது மூப்பு காரணமாக கடந்த 4-ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்தது. மருத்துவ குழுவினர் இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும், தாய் யானை பரிதாபமாக உயிரிழந்தது. Weather Report In Chennai: இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

குட்டியானையின் பாச போராட்டம்: இரண்டு மாதமே ஆன பெண் குட்டி யானை தனது தாயை சுற்றி வந்து பாச போராட்டத்தில் திரிந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் அந்த குட்டி யானையை வனப்பகுதிக்குள் யானை கூட்டங்களுக்குள் விட்டு வந்தனர். அங்குள்ள யானைக் கூட்டம் சில மணிநேரங்களிலேயே அந்த குட்டி யானையை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியது. அரேப்பாளையம் கிராமத்திற்குள் புகுந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு, ஆசனூர் வனச்சரக அலுவலகத்தில் பால், மருந்து அளித்து கடந்த 3 நாட்களாக பராமரித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், அந்த குட்டி யானையை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை மற்றும் பராமரிப்பு ஆகியவை சிறப்பாக இருப்பதால் மருத்துவ குழு கண்காணித்துக்கொள்ளும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.