Church Priest Arrested: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தேவாலய பாதிரியார் போக்சோவில் கைது..!

காஞ்சிபுரத்தில் தேவாலய பாதிரியார் ஒருவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Arrest | Sexual Harassment File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 04, காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இவரது தாய் உயிரிழந்துவிட்ட நிலையில், தனது அக்கா மற்றும் அப்பாவுடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை அங்குள்ள தேவாலயம் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவார காலம் சிறுமி தேவாலயத்தில் தங்கி இருந்துள்ளார். Green Grapes Benefits: பச்சை திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

இந்நிலையில், அங்கு பாதிரியாராக (Church Priest) இருந்து வரும் தேவ இரக்கம் என்பவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு (Sexual Harassment) கொடுத்துள்ளார். இதனால் சிறுமி பயந்து அலறியடித்து, அங்கிருந்து கத்தியபடி வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கையில் உண்மை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, காஞ்சிபுரம் மகளிர் காவல்நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா புகார் அளித்தார். இதன்அடிப்படையில் பாதிரியார் தேவ இரக்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அவரை அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement