Green Grapes (Photo Credit: Pixabay)

ஜூலை 04, சென்னை (Health Tips): நம் அனைவருக்குமே பழங்கள் சாப்பிடுவது என்பது மிகவும் பிடிக்கும். ஒரு சிலருக்கு குறிப்பிட்ட பழங்கள் தான் பிடிக்கும் என்பார்கள். அப்படி ஒவ்வொருவருக்கும் தனியாக உள்ள பழங்கள் லிஸ்ட்டில், திராட்சை பழம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அனைவருக்கும் மிகவும் பிடித்த திராட்சை பழம் கருப்பு, பச்சை என இருவகைகளில் உள்ளது. அதில் பச்சை நிற திராட்சை அதிகமாக புளிப்பு இல்லாமல், தித்திக்கும் என்பதால் பலரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த திராட்சைகள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை அளிக்கின்றது. அந்தவகையில் பச்சை திராட்சையில் (Green Grapes) உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: திராட்சையில் நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அடங்கியுள்ளது. அதே போல் வைட்டமின் பி, ஜிங்க், காப்பர், இரும்புச்சத்து போன்றவையும் இருக்கின்றன. இவை அனைத்தும் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். Woman Falls From Private Bus: ஓடும் பேருந்தில் தவறி விழுந்த பெண் படுகாயங்களுடன் மீட்பு; பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..!

உடல் எடை குறைப்பு: திராட்சைப் பழங்களை சாப்பிடுவதினால், இதில் கலோரிகள் மிகக் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. மேலும், இதிலுள்ள நார்ச்சத்துக்கள் நீண்ட நேரத்திற்கு பசியை தாங்கும் சக்தியை கொடுக்கும். இதனால், உடல் எடை குறைந்து கட்டுக்குள் இருக்கும்.

எலும்பு ஆரோக்கியம்: பச்சை திராட்சையில் உள்ள காப்பர், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்றவை எலும்புகளை வலிமையாக்கும். மேலும், எலும்பு உருவாக்கத்திற்கு முக்கியமாக தேவைப்படும் நுண் ஊட்டச்சத்துக்கள் பச்சை திராட்சையில் உள்ளது.

சிறுநீரக கல் வராமல் தடுக்கும்: நாம் வாழும் சூழல் வெப்ப மண்டல பகுதி என்பதால் நமக்கு சிறுநீரக கல் உருவாகும் சாத்தியம் அதிகமாக உள்ளது. தினமும் திராட்சைப் பழங்களை சாப்பிட்டு வருவதால் சிறுநீரக கல் உருவாகுவது தடுக்கப்படும். இதில் மிகுதியான நார்ச்சத்து உள்ளது.

ஆஸ்துமா: பச்சை திராட்சை நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுக்கிறது. தினமும் சிறிதளவு பச்சை திராட்சை சாப்பிடுவது, சுவாச மண்டல பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற செய்யும். ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாத்துக்கொள்ளும்.