College Girl Arson: கல்லூரி மாணவி தீக்குளிப்பு; காதலன் மேல் சந்தேகப்பட்டு விவரீத முடிவு..!

மயிலாடுதுறையில் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக கருதி, கல்லூரி மாணவி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Arson File pic (Photo Credit: Pixabay)

மே 10, மயிலாடுதுறை (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டம், நகர்நிலையம் தெற்கு தெருவை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது மகன் ஆகாஷ் (வயது 24). இவர், பூம்புகாரில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம். மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, கச்சப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகப்பன் என்பவரது மகள் சிந்துஜா (வயது 20). இவர், மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. பொருளியல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். Woman Raped By Preacher: பரிகாரம் செய்வதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்; சாமியார் தலைமறைவு..!

இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஆகாஷ் வேறொரு பெண்ணுடன் பழகி வருவதாக, மாணவி சிந்துஜா நினைத்துள்ளார். இதனால், இவர்களுக்கிடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, மீண்டும் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மயிலாடுதுறை பாலக்கரை என்ற இடத்தில் இருவரும் நின்று பேசியுள்ளனர். சிந்துஜா, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை (Petrol) ஊற்றி தீக்குளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆகாஷ், அவரை காப்பாற்ற முயன்றபோது அவரின் மீதும் தீப்பற்றியது.

இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர். பின்னர், உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.