Minor Girl Pregnant: 17 வயது சிறுமி கர்ப்பம்; கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!

திருப்பூரில் கட்டிட தொழிலாளி ஒருவர் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rape File pic (Photo Credit: Pixabay)

மே 25, திருப்பூர் (Tirupur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அருகே தேர்ப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான சிவக்குமார் என்ற சிவா (வயது 38). இவர் 17 வயது சிறுமியை கட்டிட வேலைக்கு உடன் அழைத்துச் சென்று, அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். Son Beat The Mother To Death: தாயுடன் ஏற்பட்ட தகராறு; தாயை அடித்து கொடூர கொலை..! மகன் வெறிச்செயல்..!

இந்நிலையில், அந்த சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று, அவருடன் ஆசையாக பேசிகொண்டு அங்கு தனிமையில் (Minor Girl Rape) இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், வீட்டை விட்டு சென்று வேறொரு இடத்தில் தங்கியுள்ளார். இருப்பினும், அவர் அங்கு சென்றும் சிறுமியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

பின்னர், ஒரு நாளில் சிறுமி வயிற்று வலிப்பதாக அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதனால், அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக உள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் தாயார் சிவக்குமார் என்பவர் மீது தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.