Judgment On Former DGP Rajesh Das’s Plea: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை..!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Rajesh Das (Photo Credit: @journsuresh X)

பிப்ரவரி 12, சென்னை (Chennai): தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது முதலமைச்சரின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்காக சிறப்பு டிஜிபியாக ராஜேஷ் தாஸ் ( Former DGP Rajesh Das) பணியில் இருந்தார். அப்போது அவர் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கினை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸிற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 20,500 அபதாரமும் விதித்தது. Suicide By Jumping In Front Of A Train: இரயில் முன்பாய்ந்து பறிபோன 5 உயிர்கள்: குழந்தைகளின் கண்களை கட்டி தாய்-மகள்களின் விபரீத முடிவு.! தஞ்சாவூரில் சோகம்.!

இதனை எதிர்த்து ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். பின்னர் பலமுறை கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து வந்தார். இதனால் நீதிமன்றம் அவரை எச்சரித்தது. பின்னர் ஐந்து நாட்கள் வாதாடி தனது வாதத்தை நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் கடந்த ஒன்பதாம் தேதி இறுதி வாதத்தை முன் வைத்தார். இந்த நிலையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு கீழமை நீதிமன்றம் அளித்த மூன்று ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்து விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா தீர்ப்பு வழங்கினார். மேலும் அவரின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ராஜேஷ் தாசுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.