Drunken Man Violates A Woman: பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணிடம் போதை ஆசாமி அத்துமீறல்..!
கரூரில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த பெண்ணிடம், தவறாக நடந்துகொண்ட போதை ஆசாமியை எட்டி உதைத்த பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஜூன் 15, கரூர் (Karur News): சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 53). இவருடைய மகனின் திருமண வேலையாக திண்டுக்கல் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது, அங்கு குடிபோதையில் (Drunken Man) இருந்த ஒருவர் சுமதியிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி, அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இவர் அந்த போதை ஆசாமியை எட்டி உதைத்துள்ளார். Child Death In Washing Machine: வாஷிங் மிஷினில் குழந்தை விழுந்து தண்ணீரில் மூழ்கி பலி..!
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர், அந்த போதை ஆசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். இதனிடையே, சுமதி காவல்துறையினருக்கு அழைத்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மேலும், பேருந்து நிலையத்தில் ஒரு பெண் தனியாக இருக்க முடியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சுமதியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சுமதி நடந்தவற்றை கூறி காவல்துறையினரிடம் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். பின்னர், சுமதியை பேசி சமாதானப்படுத்தி அவரை அவரது சொந்த ஊருக்கு செல்ல சேலம் பேருந்தில் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.