ஜூன் 15, பீட் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டம், அம்பஜோகை பகுதியில் நீதிபதி ஜெய்சிங் சவான், அவரது மனைவி மற்றும் 5 வயது மகன் உதயசிங் ஆகியோர் வசித்து வருகின்றனர். ஜெய்சிங் சவான் பணி நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில், அவரது மனைவி அவன் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்துள்ளார். இவரது 5 வயது மகன் உதயசிங் வீட்டில் தனியாக விளையாடிக்கொண்டிருந்தான். சற்று நேரம் கழித்து குழந்தையை அவரது தாயார் தேடியுள்ளார். அப்போது, குழந்தை வீட்டில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால், பதற்றமடைந்த அவர் உடனே தனது கணவரை வீட்டிற்கு வர சொல்லி செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். NEET Exam Scam: நீட் தேர்வு மோசடி வழக்கு; பள்ளி முதல்வர், பயிற்சி ஆசிரியர் உட்பட 5 பேர் கைது..!
இதனையடுத்து, இவர்கள் இணைந்து தேடி வந்த நிலையில், குழந்தை வீட்டில் வைக்கப்பட்டிருந்த வாஷிங் மிஷினில் (Washing Machine) விழுந்து கிடப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தையை பல்வேறு முயற்சிகள் செய்து காப்பாற்ற முயன்றனர். இருப்பினும், குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது குளியலறைக்குச் சென்றதாகவும், அவரது பொம்மை வாஷிங் மிஷினில் விழுந்ததாகவும் தெரிகிறது. பொம்மையை வெளியில் எடுக்க, அவர் ஒரு ஸ்டூலை வைத்து அதில் ஏறியுள்ளார். அப்போது, தடுமாறி இயந்திரத்தின் உள்ளே விழுந்துள்ளார். இயந்திரத்தில் தண்ணீர் இருப்பதால், அவர் தண்ணீரில் மூழ்கியுள்ளது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.