Lorry-Bus Accident: லாரி - அரசு பேருந்து மோதல்; சென்னை-போளூர் தேசிய நான்கு வழி சாலையில் விபத்து..!

Accident (File Pic)

மார்ச் 22, போளூர் (Thiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் போளூர் புறவழிச் சாலையில் சேத்துப்பட்டு நெல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து வந்த லாரியில், நெல் ஏற்றிக்கொண்டு போளூர் நோக்கி சென்றுள்ளது. போளூரில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த அரசுப் பேருந்து வளைவில் திரும்பும்போது, எதிரே வந்த லாரியில் மோதியது. Minor Girl Sexual Abuse: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் போக்சோவில் கைது..!

விபத்தில் லாரியின் வலதுபுற கண்ணாடியும், பேருந்தின் வலதுபுற கண்ணாடியும் ஒன்றோடு ஒன்று மோதியது. இதனால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் சாலையில் இருந்து லாரியை எடுக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த போளூர் காவல்துறையினர் லாரி ஓட்டுநரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கு லாரி ஓட்டுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், பேருந்தில் பயணம் செய்து வந்து பயணிகளும் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இருப்பினும், லாரி ஓட்டுநர் அதற்கு மறுப்பு தெரிவித்து சாலையிலேயே லாரியை நிறுத்தியுள்ளார். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர், லாரி ஓட்டுநர் காவலர்களின் ஆலோசனைப்படி, அரசு பேருந்து ஓட்டுநர் மீது புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.