Manufacturing And Selling Fake Liquor: போலியாக மதுபானம் தயாரிப்பு; மடக்கி பிடித்த காவல்துறையினர்..! - 5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது..!

Wine Shop (Photo Credit: Wikipedia)

ஏப்ரல் 03, திருச்செங்கோடு (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி சாலையில் உள்ள பனங்காட்டுபாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் போலியாக மதுபானங்கள் தயாரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. YouTube Employee Hanging Suicide: 27 வயது இளைஞர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை – காவல்துறையினர் தீவிர விசாரணை..!

தகவலின்படி, காவல்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இதில், 5400 லிட்டர் ஸ்பிரிட், காலி மதுபாட்டில்கள், மூடிகள், வெண்ணிலா சுவையூட்டி மற்றும் போலி லேபில்கள் என அனைத்தும் பறிமுதல் (The Police Have Arrested A Gang) செய்யப்பட்டு, திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், விழுப்புரம் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்துவேல், ஓங்கூர் பகுதியை சேர்ந்த செந்தில், பிரகாஷ், முரளி மற்றும் வட்டூர் பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஷ் ஆகியோர் 5 பேரும் இந்த சம்பவத்தில் சிக்கியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், மாதேஷ் என்பவர் இந்த பகுதியில் உள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், இந்த கும்பல் புதுச்சேரியில் இருந்து 50 லிட்டர் ஸ்பிரிட் கேன்களை கொண்டு, போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய ஒரு மகிழுந்து, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு மினி லாரி என அனைத்தையும் பறிமுதல் செய்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக, மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை காவல்துறை அதிகாரி சுல்தான் தலைமையில் தனிப்படை குழு அமைத்து இந்த கும்பலோடு தொடர்புடையவர்களை தேடி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.