Mini Lorry Accident: லாரி மீது மினி லாரி மோதி விபத்து – ஓட்டுநர் பலி..!
விருத்தாசலம் அருகே சென்று கொண்டிருந்த மினி லாரி சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மார்ச் 16, விருத்தாசலம் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசம் (வயது 25), காங்கேயம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 31) மற்றும் பிரபு (வயது 22) ஆகியோர் கோழிகள், வாத்துகளை ஏற்றிக்கொண்டு வடலூரில் நடைபெறும் கோழி சந்தைக்கு, மினி லாரியில் காங்கேயத்திலிருந்து இரவு புறப்பட்டுள்ளனர். ஞானபிரகாசம் வண்டியை ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் விருத்தாசலம் அருகே வந்துகொண்டிருந்த போது, எதிர்பாராத வித மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. Wild Elephant Attacked: காட்டு யானை கொடூர தாக்குதல் – வாலிபர் மரணம்..!
இதில், ஞானபிரகாசம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடன் பயணித்த பிரபு, தினேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து, தகவலறிந்து வந்த விருத்தாசல காவல்துறையினர் அவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். மேலும், தினேஷ் மற்றும் பிரபு ஆகியோரை மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து, விருத்தாசலம் காவல்துறையினர் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.