Wild Elephant (Photo Credit: pixabay)

மார்ச் 16, நீலகிரி (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வறட்சி நிலவுவதால், குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் உணவைத் தேடி அடிக்கடி வருகின்றது. இவ்வாறு அடிக்கடி வரும் காட்டு யானைகளை அப்பகுதி மக்கள் துரத்தி விடுவர். இந்தநிலையில், சூண்டி பகுதியில் பிரசாந்த் என்ற நபரை காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது. Tamil Nadu Waterfalls Are Dry: தமிழகத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் – வறண்ட நிலையில் குற்றால அருவிகள்..!

மேலும், காட்டு யானை தாக்கியதில் அவர் அருகே இருந்த கால்வாய்க்குள் விழுந்துள்ளார். யானை தாக்கியதாலும், கால்வாய்க்குள் விழுந்ததாலும் பிரசாந்த் பலத்த காயமடைந்துள்ளார். அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, சிகிச்சைகாக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைகாக உதகை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனால், அப்பகுதி மக்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.