Patient Dead In Hospital: நெஞ்சுவலியில் அவதிபட்ட நோயாளி பரிதாபமாக பலி – அவசர ஊர்தி வராததால் நேர்ந்த சோகம்..!

நீலகிரியில் நீண்டநேரமாகியும் அவசர ஊர்தி வராததால் நெஞ்சு வலியோடு அவதிபட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Heart Attack (Photo Credit: Pixabay)

மார்ச் 15, நீலகிரி (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளப்பள்ளி பகுதியில் வசித்து வந்த வேளாங்கண்ணி (வயது 43) என்ற பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டார். Young Girl Raped: இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வாலிபர் – மயக்க மருந்து கொடுத்து கொடுமை..!

சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் அதிகமாவதை கண்டு, பந்தலூர் பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறித்தினர். அவர்களால் உடனடியாக செல்ல போக்குவரத்து வாகன வசதி இல்லாததால், ஒரு மணிநேரத்திருக்கும் மேலாக அவசர ஊர்தி வரும் வரை காத்திருந்துள்ளனர். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வராததால் அந்த பெண் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்களிடம், சண்டையிட தொடங்கினர். இதனையடுத்து, மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவசர ஊர்தி வராததால், நெஞ்சுவலியோடு வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement