
மார்ச் 20, மதுரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டம், விருந்தாவன் பகுதியில் வசித்து வருபவர் கன்ஹையா தாகூர். இவரின் மகன் ராஜு பாபு (வயது 32). கடந்த பல ஆண்டுகளாகவே ராஜுவுக்கு தீராத வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று பல்வேறு சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இதனிடையே, அவ்வப்போது செல்போன் பயன்படுத்தி வந்த ராஜு பாபு, யூடியூப் பக்கத்தில் வயிற்று வலிக்கு அறுவை சிகிச்சை செய்வது எப்படி என தேடி இருக்கிறார். அந்த வீடியோவில் வந்தவாறு, தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் முடிவெடுத்து இருக்கிறார். Wolfdog Okami: அடேங்கப்பா.. உலகின் விலையுயர்ந்த நாய்.. ரூ.50 கோடி கொடுத்து வாங்கிய பெங்களூர் இளைஞர்.!
தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்தார்:
யூடியூப் வீடியோவில் கூறியபடி அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்து, ஊசி, கத்தி என அனைத்தையும் உள்ளூர் மருந்து கடையில் வாங்கி இருக்கிறார். பின் வீட்டுக்கு வந்தவர் தனக்குத்தானே வயிற்றை கிழித்து, பின் அதில் 11 தையல் போட்டுள்ளார். அடிவயிறு பகுதியில் கிழித்தவர், தனக்கத்தானே மருந்து செலுத்தி தையலை பதித்துள்ளார். முதலில் அவருக்கு மருந்தின் வீரியம் காரணமாக பெரிய அளவிலான வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. ஆனால், நேரம் செல்லச்செல்ல சிறுக ஏற்பட்ட வலி அபரீதமாக அதிகரித்தது. இதனால் அலறி இருக்கிறார். பதறி வந்த குடும்பத்தினர், ராஜூவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ராஜு பாபு, தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவரின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். Allahabad High Court: "பெண்ணின் மார்பகத்தை பிடித்து, உள்ளாடை கயிற்றை அறுப்பது கற்பழிப்பு குற்றமல்ல" - அலகாபாத் நீதிமன்றம்.!
இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டியிருக்கோ?
யூடியூப் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் வந்ததும் ஒவ்வொருவரும் தங்களை ஆகப்பெரும் மேதாவி, விஞ்ஞானி, மருத்துவர் போல பாவித்து செயல்பட தொடங்கிவிட்டனர். ஏன் ஒருசிலர் தங்களை கடவுள் போலவும் சிந்தித்து வருகின்றனர். இவ்வாறான செயல்கள் எங்கு கொண்டு நிறுத்தும் என்பதற்கு ஒரு சின்ன உதாரணமாக, மேற்கூறிய சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிப்பது, குண்டு தயாரிப்பது, கர்ப்பிணிக்கு பிரசவம் பார்ப்பது போன்ற விஷயங்கள் நடந்து, அதனால் விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் யூடியூப் பார்த்து தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்த இளைஞர் குறித்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் அனுமதியான இளைஞர்:
ये यूपी है भैया यहां कुछ भी हो सकता है।
अब देखिए मथुरा में एक युवक पेट दर्द से परेशान था फिर उसने यूट्यूब देखकर खुद का ऑपरेशन कर लिया और सर्जरी कर 11 टांके लगा लिए फिर अस्पताल 🏥 पहुंचा।
डॉक्टर युवक को देखकर हैरान ओ परेशान।
तो भैया ये यूपी है..#Mathura
#SelfSurgery pic.twitter.com/yJe9qnwiG3
— Himanshu Dwivedi(Legal Journalist)🇮🇳 (@Dwivedihd92) March 20, 2025