Menstruation Day Sanitary Pads (Photo Credit: Hellodox.com)

மே 28, சென்னை (Health Tips): இந்தியாவில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விவாதங்கள், பேச்சுக்கள் அரிதினும் அரிதான நிகழ்வாக வீடுகளில் இருந்து வருகிறது. வெளிப்படையாக இதைப்பற்றி பேசாமல் இன்று வரை அசௌகரியத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே கருதுகின்றனர். இவ்வாறான விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மாதவிடாய் தொடர்பாக ஒரே விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான தகவல் :

இந்நாளில் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான விஷயங்களை அனைவரும் தெரிந்துகொள்வோம். மாதவிடாய் நாட்களில் பருத்தி இலைகளாலான நாப்கின்களை தேர்வு செய்வது நல்லது. இது எளிதில் ரத்தத்தை உறிஞ்சும். எரிச்சல் பிரச்சனை இருக்காது. நைலான் போன்ற பொருட்களால் தயாரிக்கப்படும் நாப்கின்கள், உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தவல்லவை என்பதால் பருத்தி நாக்கின்கள் நல்லது. அதேபோல மறு பயன்பாடு செய்யப்படும் நாப்கின்களும் இன்றளவில் வந்துவிட்டன. அதையும் பயன்படுத்தலாம். Thampathiyam Tips: தம்பதிகளுக்கு அந்த விஷயத்தில் விரக்தியா? அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக.! 

எத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டும்?

உரிய முறையில் இயற்கையான நாப்கின்களை பயன்படுத்தாத பட்சத்தில் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும். மாதவிடாய் நாட்களில் ஒரு நாளுக்கு 4 முறை நாப்கின் மாற்றலாம். மென்சுரல் கப் வைத்திருப்போர் 6 முதல் 8 மணிநேரத்திற்கு ஒருமுறை அதனை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். உதிரப்போக்கு அதிகமுள்ளோர் அதற்கேற்ப நாப்கினை பயன்படுத்தலாம். குறைந்தது 3 மணி நேரத்துக்கு ஒருமுறை நாட்களை மாற்றுவது மிகவும் நல்லது.

வயிறு வலியால் அவதிப்படும் பெண்கள் :

மாதவிடாய் நாட்களில் வயிறுவலி இயற்கையானது என்பதால் அது கட்டாயம் இருக்கத்தான் செய்யும். இதற்கு சூடான ஹீட்பேக் வயிற்றில் வைத்துக்கொண்டால் இதமாக இருக்கும். வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் குடிப்பது, சூடான நீரில் குளிப்பது போன்றவை அதனை சரிசெய்ய வழிவகுக்கும். அதே நேரத்தில் வலி நிவாரண மாத்திரைகள் போன்ற மருத்துவ பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். கடுமையான வயிறு வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதும் அவசியம்.

மருத்துவரை அணுகுவது நல்லது :

மாதவிடாய் நாட்களில் காற்றோட்டமான உள்ளாடைகளை அணிவது நல்லது. வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுக்களில் இருந்து ஒரே முறையில் பாதுகாக்க சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். அதிக உதிரப்போக்கு போன்றவை இருந்தால் மருத்துவரிடம் உடல்நல பரிசோதனை செய்து கொள்ளலாம்.