மார்ச் 15, மும்பை (Mumbai News): மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையைச் சேர்ந்த இளம்பெண் (வயது 22). இவருக்கு சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டு, சில நாட்களில் செல்போன் எண்களை இருவரும் பரிமாறிக் கொண்டு பேசி பழகி வந்துள்ளனர். பின் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, வாலிபர் இளம்பெண்ணை தனது இல்லத்திற்கு வருமாறு கூறியுள்ளார். கடந்த வாரம் இளம்பெண் அவரது இல்லத்திற்கு வாலிபரை சந்திக்க சென்றுள்ளார். Young Boy Threatening Girlfriend: காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது – உல்லாசமாக இருந்த புகைப்படம் காட்டி மிரட்டல்..!
வாலிபர், அந்த இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்து வைத்திருந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். இளம்பெண்ணும் அதனை பருகிய சில மணிநேரங்களில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, அந்த வாலிபர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து மயக்க நிலையில் இருந்து தெளிந்த இளம்பெண், தான் அந்த வாலிபரால் பலாத்காரம் செய்யபட்டதை உணர்ந்து, அவருடன் சண்டையிட்டுள்ளார். கோபமடைந்த வாலிபர் உடனே வீட்டில் இருந்த ஒரு அறையில் அந்த இளம்பெண்ணை உள்ளே தள்ளி பூட்டி வைத்துள்ளார். பிறகு நீண்ட நேரம் கழித்து இளம்பெண்ணை கதவை திறந்து விடுவித்து, இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என வாலிபர் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கபட்ட இளம்பெண் நேற்று முன்தினம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.