ஆகஸ்ட் 19, சென்னை (Health Tips Tamil): நமது வீட்டின் செல்லக்குழந்தைகள் அவ்வப்போது கால் வலிப்பதாக நம்மிடம் கூறியிருப்பார்கள். குழந்தையின் இளம் பருவத்தில் வளர்ச்சிக்கான வழியாக உடல் பாகங்கள் நீளும் போது வலி ஏற்படுவது இயற்கை தான் என்றாலும், அது தொடர்ந்து வருகிறதா? என்பதை கண்காணித்து மருத்துவரின் ஆலோசனையை நாடாத பட்சத்தில் மிகப்பெரிய பக்கவிளைவை எதிர்காலத்தில் குழந்தைகள் சந்திக்க வேண்டி இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகள் அடிக்கடி கால் வலிப்பதாக கூறினால் மருத்துவரை சந்தித்து சோதனை செய்து கொள்வது நல்லது. Side Effects of Paracetamol: பாராசிட்டமால் மாத்திரையால் கருவிலேயே குழந்தைக்கு ஆபத்து.. ஆய்வில் ஷாக் தகவல்.!
குழந்தைகள் கால் வலி குறித்து கவனிக்க வேண்டிய அறிகுறிகள் :
அதே நேரத்தில் குழந்தைகள் நன்கு ஆடி விளையாடிய பின்னர் ஒருநாள் கால்வலிப்பதாக கூறினால் அதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அது இயற்கையாகவே சரியாகும். இளம் சூடுள்ள தண்ணீரில் ஒத்தடம் கொடுப்பது போன்றவை நல்ல பலனை தரும். ஆனால் குழந்தைகள் விட்டுவிட்டு குறிப்பிட்ட இடைவேளையில் கால் வலிப்பதாக கூறினால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை செய்து கொள்வது நல்லது. குழந்தைகளின் கால் வலிக்கு உடலின் சத்து குறைபாடு போன்றவையும் காரணமாக கூறப்படுகிறது. இதனால் எடை இழப்பு, சோர்வு, குழந்தைகள் வலுவிழந்து தோற்றத்துடன் காணப்படுதல், கடுமையான உடல் வலியை எதிர்கொள்ளுதல், மூட்டு பகுதியில் வீக்கம், எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது, அதிர்ச்சி உணர்வுடன் இருப்பது போன்ற அறிகுறியுடன் இருப்பார்கள்.
மருத்துவரை அணுகுவது நல்லது :
இது தவிர்த்து வைட்டமின் டி குறைபாடு, வைரஸ் தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த புற்றுநோய் போன்ற பிரச்சனைகளும் இருக்கின்றன. ஆகையால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்களா? என்பதை சோதிப்பது போல அவர்கள் எந்த மாதிரியான மன நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் அவ்வப்போது கண்காணிப்பது நல்லது.