மார்ச் 30, லக்னோ (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ (Lucknow) பகுதியில் வசித்து வரும் பெண்மணி அரவிந்த் குமார் பாண்டே. இவரின் மனைவி சந்தியா பாண்டே. தம்பதிகளுக்கு கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று குழந்தை பிறந்தது. சி மெடிக்கல் கேர் (She Medical Care) எனப்படும் தனியார் மருத்துவமனையில், மருத்துவர் புஷ்பா ஜெய்ஷ்வால் என்பவரால், அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றெடுக்கப்பட்டுள்ளது. குழந்தைப்பேறு அடைந்த பின்னர் பெண்மணி வீட்டுக்கு திரும்பினாலும், தொடர்ந்து வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டுள்ளார். இதற்காக பல மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. Express Train Derailed: பயணிகள் அதிவிரைவு இரயில் தடம்புரண்டு விபத்து; ஒடிசாவில் பரபரப்பு.!
எக்ஸ்ரேவில் அதிர்ச்சி:
இதனிடையே, சமீபத்தில் தம்பதிகள் லக்னோவில் உள்ள கிங் ஜியார்ஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர். அங்கு சந்தியாவுக்கு எக்ஸ் ரே செய்து பார்க்கப்பட்டது. அப்போது, அவரின் வயிற்று பகுதியில் கத்தரிக்கோல் (Surgical Scissor in Stomach) ஒன்று இருந்தது தெரியவந்தது. இதனாலேயே பெண்மணி பல ஆண்டுகளாக வயிற்று வலியால் துடித்து இருக்கிறார். பெண்ணுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கத்தரிக்கோல் வெளியே எடுக்கப்பட்டது. பூரண சிகிச்சைக்கு பின்னர், பெண் நலமுடன் வீடு திரும்பி இருக்கிறார். இந்த விஷயம் குறித்து பெண்ணின் கணவர் மருத்துவர் புஷ்பாவுக்கு எதிராக புகாரும் அளித்துள்ளார்.
வயிற்று வலி இருந்தால், அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒரு மருத்துவமனைக்கு பதில், வேறொரு மருத்துவமனைக்கு சென்றும் பரிசோதனை செய்வது நல்லது.