Youth Arrested: ஓடும் இரயிலில் பெண் வங்கி மேலாளருக்கு பாலியல் தொல்லை; வடமாநில இளைஞர் கைது.!
புனே - கன்னியாகுமரி விரைவு இரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் 11, ஈரோடு (Erode News): கன்னியாகுமரியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவை இணைக்கும் வகையில், கன்னியாகுமரி - புனே (Kanyakumari Pune Superfast Express) அதிவிரைவு இரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த இரயில் கன்னியாகுமரியில் புறப்பட்டு, பாலக்காடு வழியாக கோவை, சேலம், காட்பாடியை இணைத்து ஆந்திரா, கர்நாடகா வழியே புனே சென்றடையும். Vikravandi Accident: கார் - டூவீலர் மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி., 3 பேர் படுகாயம்., டயர் வெடித்து சோகம்.!
பெண் வங்கி மேலாளர்:
இதனிடையே, சம்பவத்தன்று கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியைச் சேர்ந்த பெண் மேற்கூறிய (Women Passenger Sexually Harassed) இரயிலில் பயணம் செய்துள்ளார். இவர் சேலத்தில் செயல்பட்டு வரும் வங்கியில் மேலாளராக பணியில் இருக்கிறார். சேலத்தில் இருந்து அவர் சொந்த ஊர் செல்ல புனே - கன்னியாகுமரி இரயிலில் ஏறி இருக்கிறார். அப்போது, அதே இரயிலில் மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த மதாப் சர்க்கார் என்ற இளைஞர் பயணம் செய்துள்ளார்.
பாலியல் தொல்லை:
இரயில் பயணத்தின்போது சர்க்கார் வங்கி பெண் மேலாளருக்கு பாலியல் தொல்லை கொடுக்கவே, பெண்மணி உடனடியாக இரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துவிட்டு, மின்னஞ்சல் வாயிலாகவும் புகார் பதிவு செய்துள்ளார். இதன்பேரில் ஈரோட்டில் தயாராக இருந்த காவல்துறையினர், இரயில் ஈரோடு சென்றதும் இளைஞரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது வடமாநில தொழிலாளி சிறைக்கைதியாக இருக்கிறார்.