நவம்பர் 11, விக்கிரவாண்டி (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவாண்டியில், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் ஒன்று பயணம் செய்தது. இந்த கார் விக்கிரவாண்டி, ராதாபுரம் பகுதியில் சென்றபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து வாகனம் தறிகெட்டு இயங்கியது. Tirupathur Accident: வினையில் முடிந்த விளையாட்டு; கார் மோதி முதியவர் பரிதாப பலி., பதறவைக்கும் காட்சிகள்.!
2 பேர் பலி., 3 பேர் படுகாயம்:
இந்த சம்பவத்தில் கார் இருசக்கர வாகனம் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் செய்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் விசாரணை:
இவ்விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் விபத்து நேர்ந்ததும் அங்கிருந்து தப்பிசென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் வந்த நபர்களுக்கு வலைவீசி இருக்கின்றனர்.