Love Married Couple Suicide: தாலிகட்டிய 3 மாதங்களில் நடந்த சோகம்.. புதுமணதம்பதிகளின் விவரீத முடிவால் உறவினர்கள் சோகம்..!

திருமணமாகி 3 மாதங்களில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டது இருதரப்பு உறவினர்களுக்கிடையே ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.

Couple Poovarasan Aishwarya | Suicide File Pic (Photo Credit: @Sriramrpckanna1 X / Pixabay)

மார்ச் 05, வேலூர் (Vellore News): வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, திப்பசமுத்திரம் ஊரைச் சார்ந்த தம்பதி ரவி-ராஜலட்சுமி. இவர்களின் மகன் பூவரசன் (வயது 26) ஓட்டுனராக பணியாற்றி வந்தார். பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பகுதியைச் சேர்ந்த தம்பதி சேகர்-தாமரைச்செல்வி, இவர்களது மகள் ஐஸ்வர்யா (வயது 25). கடந்த சில வருடங்களாக பூவரசனும், ஐஸ்வர்யாவும் (Vellore love married couple) காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் சென்ற ஆண்டு நவம்பர், 19 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். Threatening Against PM & UP CM: பிரதமர், உ.பி முதல்வருக்கு கையில் வாளுடன் கொலை மிரட்டல்; வீடியோ பதிவிட்டு அதிர்ச்சி செயல்.! 

திருமணமான 3 மாதத்தில் நேர்ந்த சோகம்: நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இருந்தபோது, ஐஸ்வர்யா தெரிந்தவர்களின் வீட்டு நிகழ்ச்சிகாக வெளியே அழைத்துச்செல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு பூவரசன் மறுப்பு தெரிவித்துவிட்டு வெளியில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பூவரசன் கதவை உடைத்து ஐஸ்வர்யாவை மீட்டு அவசர ஊர்தியின் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு ஐஸ்வர்யா இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

விவரீத முடிவு: திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில், காதல் மனைவி தற்கொலை செய்துகொண்ட காரணத்தால் பூவரசன் தனது மனைவியின் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறையைச் சுற்றிச் சுற்றி வந்து, பின் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆன போதும் பூவரசன் வெளியே வராததால், உறவினர்கள் சென்று பார்த்த போது பூவரசன் கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்துவிட்டு அவரும் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து இருதரப்பு உறவினர்களும் ஆழ்ந்த சோகத்தில் அழுது புலம்பியபடி மருத்துவமனையில் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆனதால் வேலூர் உதவி ஆய்வாளர் கவிதா விசாரணை பணியை மேற்கொண்டுள்ளார்.

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement