Young Woman Pregnancy: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர்; திருமணத்திற்கு மறுத்ததால் நடந்த சம்பவம்..!

வேலூரில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வந்த நிலையில், அவர் மீது காவல்நிலையத்தில் இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Pregnant (Photo Credit: Pixabay)

ஜூலை 10, வேலூர் (Vellore News): கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேலூர் அருகே ஊசூரில் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதன்காரணமாக அந்த இளம்பெண் 7 மாத (Pregnancy) கர்ப்பிணியானார். 4 Students Sexually Harassed: 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; முன்னாள் மாணவர் போக்சோவில் கைது..!

இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண் ராஜேஷிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், கர்ப்பத்திற்கு காரணம் நான் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரின் குடும்பத்தினரும் இளம்பெண்ணை அடித்து கீழே தள்ளிவிட்டனர்.

இதுகுறித்து, அந்த இளம்பெண் வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் என 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement